Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்கல்லம், தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்.. மும்பை இந்தியன்சிடம் வீழ்ந்தது குஜராத் லயன்ஸ்

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை நடந்த 16வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது.

மும்பை அணியில் டிம் சவுத்திக்கு பதிலாக மலிங்கா அணிக்கு திரும்பினார். குஜராத் அணியில் பின்ஞ்க்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார்.

Mumbai Indians won the toss and Chose to fielding

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெக்கல்லம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இவர் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசி 64 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உட்பட 48 ரன்கள் சேர்த்தார்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் 2வது பந்திலேயே பார்திவ் படேலின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் இணைந்த ஜாஸ் பட்லர் 26, ராணா 36 பந்தில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடித்து 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, போலார்டு இணை குஜராத் வீரர்களின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். போலார்டு 23 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசி 39 ரன்களை குவித்தார். அதே போல் கேப்டன் ரோகித் சர்மா 29 பந்தில், 40 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 16, 2017, 20:22 [IST]
Other articles published on Apr 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+