Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு என்ன பிரச்சனை.. பேரை மட்டும் போடுங்க.. ஒரே ஒரு வீரருக்காக தீவிர மீட்டிங்.. பகீர் பேரம்

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் எந்த அணியும் விரும்பாத ஒரு வீரரின் பெயர் ஐபிஎல் ஏலத்திற்கான லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருக்கிறது.

1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது.

எப்படி

எப்படி

இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல நாட்களாக கிரிக்கெட் ஆடாத மோர்னி மோர்கல் போன்ற வீரர்களின் பெயர்களும் கூட இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் ஸ்ரீசாத் போன்ற வீரர்கள் பெயர்கள் இதில் தேர்வாகவில்லை.

அர்ஜுன்

அர்ஜுன்

இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் பவுலராக இருக்கிறார். சச்சின் போல சிறப்பான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் சுமாராக பவுலிங் செய்ய கூடியவர்.

அனுபவம்

அனுபவம்

இவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை. முதல் தர போட்டிகளிலும் இவரின் ரெக்கார்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனாலும் சச்சின் கொடுக்கும் உலக தரமான பவுலிங் கோச்சிங் காரணமாக இவர் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வருகிறார் .

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க எந்த அணிக்கும் விருப்பம் இல்லை. இந்த நிலையில்தான் இவரின் பெயரை ஏலத்திற்கான லிஸ்டில் சேர்க்க வேண்டாம் என்று பலரும் நினைத்து உள்ளனர். ஐபிஎல் தேர்வுக்குழு கமிட்டி இவரின் பெயரை சேர்க்க வேண்டாம் என்று நினைத்துள்ளது.

 மீட்டிங்

மீட்டிங்

இது தொடர்பாக மீட்டிங்கும் நடந்துள்ளது. இதில் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கர் மீது ஆர்வம் செலுத்தி உள்ளது . அவரை நாங்கள் எடுப்போம். பெயரை லிஸ்டில் சேருங்கள். நாங்கள் ஏலத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது. இதற்காக நீண்ட நேரம் ஆலோசனை நடந்துள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இதன் பின்பே அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால் இவர் மீது வேறு எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மும்பை அணி இவரை எடுப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

Story first published: Saturday, February 13, 2021, 10:07 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+