Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி மேல் அடி.. ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்த பிசிசிஐ-க்கு சிக்கல்.. ஒத்துழைக்காத சக நாடுகள்..முழு விவரம்!

மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிசிசிஐக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டிருக்கிறது.

தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்தாண்டு டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால் உலகக்கோப்பைக்கு தயாராகும் அயல்நாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பதில் முட்டுக்கட்டைகள் விழுந்து வருகிறது.

இங்கிலாந்து வாரியம்

இங்கிலாந்து வாரியம்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஸ்லே கில்ஸ் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ஐ புறம்தள்ளிவிட்டு சொந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இது மறைமுகமாக வீரர்களுக்கு ஐபிஎல்-ல் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்தது. இந்த ஷாக்கே இன்னும் பிசிசிஐ-யிடம் குறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி வந்துள்ளது.

நியூ, வீரர்கள் இல்லை

நியூ, வீரர்கள் இல்லை

ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டால் நியூசிலாந்து வீரர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுவே ஆகும். இதனால் இதனை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யும் முடிவுக்கோ கண்டிப்பாக அந்நாட்டு வாரியம் வராது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சிரமம்.

அணிகள்

அணிகள்

நியூசிலாந்து வீரர்கள் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் அணிகளாக மும்பை மற்றும் ஐதராபாத் உள்ளது. ஏனென்றால் ஐதராபாத் அணிக்கு வில்லியம்சன் கேப்டனாக உள்ளார். அதே போல மும்பை அணியின் பவுலிங் பில்லராக போல்ட் உள்ளார். இதை தவிர, ஆடம் மில்ன் ( மும்பை), மிட்சல் சாண்ட்னர் (சிஎஸ்கே), ஃபெர்குசன் (கொல்கத்தா), டிம் செர்ஃபெர்ட் ( கொல்கத்தா), ஃபின் ஆலன் ( ஆர்சிபி), கெயிலி ஜேமிசன் ( ஆர்சிபி), உள்ளனர்.

Story first published: Wednesday, May 12, 2021, 20:06 [IST]
Other articles published on May 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+