Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னிடம் இருந்து பறிக்க முடியாது..அர்ஜுன் டெண்டுல்கருக்கு சகோதரி வழங்கிய பாராட்டு.. இணையத்தில் வைரல்

சென்னை: அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்-ல் மும்பை அணிக்கு களமிறங்குவது குறித்து அவரது சகோதரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனை மும்பை அணி ஏலம் எடுத்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் முதலில் இவர் பெயர் இடம்பெறாமல் இருந்து பிறகு சேர்க்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் எப்போது விடப்படுவார் என பலரும் காத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் ஏலம் விடப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியே அர்ஜுன் டெண்டுல்கரையும் ஏலம் எடுத்தது.

வாழ்த்து

வாழ்த்து

ஐபிஎல்-ல் களம் இறங்குவது குறித்து அவரது சகோதரி சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் இந்த சாதனையை யாரும் உன்னிடம் இருந்து பறிக்க முடியாது சகோதரா.. இது உனக்கானது" என தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

 மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல்-ல் நடப்பு சாம்பியனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் பல மாற்றங்களுடன் வர திட்டம் போட்டுள்ளது. அதன்படி அர்ஜுன் டெண்டுல்கருக்கு ப்ளேயிங் 11 ல் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, February 20, 2021, 8:37 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+