Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்தார் .. காரணத்தை விராட் கோலியிடமே கேளுங்கள்.. கங்குலி பேட்டி

மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து திடீரென விலகியது ஏன் என்பது குறித்து விராட் கோலி தான் பதிலளிக்க வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில் தலைமையேற்று 40 வெற்றி, 11 டிராவுடன் 4வது சிறந்த கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், பிசிசிஐ தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

Only Virat Kohli can explain why he left from Test Captaincy Says Sourav Ganguly

இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும். அதேபோல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.

அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு இருந்தது. அதனால் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தார். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு கங்குலியின் நடவடிக்கையே காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்தை கங்குலி கூறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, June 13, 2023, 16:31 [IST]
Other articles published on Jun 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+