Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்தரப்பு தொடரை வெல்லப்போவது யார்? பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இலங்கை.. மெண்டிஸ் சதம்!

லாகூர்: முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணிக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் சேர்த்து இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது. தொடர்ந்து ஆடிய அந்த அணி, ஒரு கட்டத்தில் எளிதாக பெரிய ஸ்கோரை எட்டும் நிலையில் இருந்தது.

Pak vs SL

சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கமிண்டு மெண்டிஸ் 128 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதே போன்று இளம் வீரர் பவன் ரத்நாயகே 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து நல்ல கம்பெனி கொடுத்தார். இருப்பினும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

AUS vs SA: ரபாடா மாபெரும் சாதனை.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் அபாரம்

AUS vs SA: ரபாடா மாபெரும் சாதனை.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் அபாரம்

இறுதி 9 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும், கீழ்வரிசை பேட்டர்களின் முயற்சியால் அணி 300 ரன்களைக் கடந்தது. கடைசி ஓவர்களில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து அணியின் ஸ்கோரை 325 ரன்களுக்கு உயர்த்தினர்.

பாகிஸ்தானுக்கு செல்ல பயமா? இங்கிலாந்து அணியிலிருந்து கம்பி நீட்டிய பீட்டர்சன்

Also Read

பாகிஸ்தானுக்கு செல்ல பயமா? இங்கிலாந்து அணியிலிருந்து கம்பி நீட்டிய பீட்டர்சன்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டி முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஷாஹீன் அப்ரிடி 10 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவூஃப் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நசீம் ஷா 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Saturday, October 31, 2026, 17:58 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+