PAK vs SL: 110 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்.. முத்தரப்பு பைனல் சுற்றுக்கு இலங்கை தகுதி
லாகூர்: கடாபி மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-வது போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இலங்கை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கம் முதலே கடும் அழுத்தத்திற்கு உள்ளானது. இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பவுலிங் கட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 110 ரன்களுக்குள் சுருண்டனர்.

அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், நிதானமாக ஆடிய இலங்கை பேட்டர்கள் ஆட்டத்தை முழுமையாக தங்கள் வசப்படுத்தினர். இறுதியில் இலங்கை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்து 62 ரன்களுடனும், அவருக்கு பக்கபலமாக ஆடிய பவன் ரத்நாயக்க 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் தரப்பில் சாகீன் அப்ரிடி மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றிகரமான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் தொடரை விட்டு இங்கிலாந்து வெளியேறியது.


Click it and Unblock the Notifications


