ஐபிஎல் தொடரில் 2,000 ரன்கள் மைல்கல்லை கடந்தார் பார்த்தீவ் பட்டேல்
மும்பை: ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் மும்பை வீரர் பார்த்தீவ் பட்டேல் இடம்பெற்றார்.
10-வது ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 10-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் பார்த்தீவ் பட்டேல் 24 ரன்களை எடுத்தபோது, ஐபிஎல் தொடர்களில் 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார் பார்த்தீவ் பட்டேல். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 26வது வீரர் என்ற பெருமை பெற்றார் பார்த்தீவ் பட்டேல்.
இதனிடையே ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் களமிறங்கிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆகியோர் மும்பை அணிக்காக 100- வது போட்டியில் பங்கேற்றனர். இப்பட்டியலில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் (127 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications