Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷிகர் தவானை அசிங்கமாக திட்டிய பியூஸ் சாவ்லா.. இப்படி ஒரு கெட்ட வார்த்தையா? அப்படி என்ன கோபம்

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில் ரன்கள் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிராப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

Piyush chawla unwanted aggression after shikhar dhawan wickets shock fans

ஷிகர் தவான் 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக, ஷிகர் தவான் பியூஸ் சாவ்லா பந்துவீச்சில் இறங்கி வந்து தொடர்ந்து பவுண்டரிகளை அடித்தார். இதனையடுத்து, அடுத்த பந்தையும் தவான் இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றார்.

அப்போது பியூஷ் சாவ்லா, பந்தை கொஞ்சம் அகலமாக வீசினார். இதனால் தவான் அந்த பந்தை அடிக்க தவறிவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்டு இஷான் கிஷன், அவரை ஸ்டம்ப்பிங் செய்தார். இதனால் பியூஷ் சாவ்லா கோபமாக ஷிகர் தவானை ஹிந்தியில் "மா"வில் தொடங்கும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தி திட்டினார்.

Piyush chawla unwanted aggression after shikhar dhawan wickets shock fans

இதனை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஷிகர் தவானும், சாவ்லா போன்ற சீனியர் என்பதால், அவரை அவுட்டாக்கிவிட்டு இப்படியா திட்டுவீங்க என்று ரசிகர்களும் விமர்சித்து வந்துள்ளனர். இதில் மிகவும் ஆச்சரியப்படும் விசயம் என்பதால், இதனை மற்ற மும்பை அணி வீரர்கள் ஆமோதிக்கும் வகையில் கொண்டாடினர்.

Story first published: Wednesday, May 3, 2023, 23:08 [IST]
Other articles published on May 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+