Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழு பலத்தோடு உள்ள மும்பை, ஹைதராபாத் நாளை மோதல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு சரவெடி

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை அணி எப்போதுமே தொடக்க ஆட்டங்களில் தோற்று பிறகு எழுச்சி பெறும் அணி. இம்முறை முதலிலேயே அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா, அவரது அண்ணன் க்ருனால் பாண்ட்யா, ராணா, ஆப்கானிஸ்தானின் இளம் ஸ்பின்னர் ரஷித் கான் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் மும்பையை தாங்கிப்பிடித்துக் கொண்டுள்ளது.

Preview: IPL 2017: Match 10: Mumbai Indians Vs Sunrisers Hyderabad on April 12

கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி சேஸ் செய்த தன்னம்பிக்கையிலுள்ளது மும்பையின் பலம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியும் முழு ஃபார்மிலுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய வார்னர் கடந்த போட்டியில் பட்டையை கிளப்பியது மும்பைக்கு கிலி ஏற்படுத்தும். அவரை ரஷித்தை வைத்து முதலிலேயே கட்டுப்படுத்த மும்பை முயலும். யுவராஜ்சிங் ஆட்டம், பிற்பகுதியில் ஹைதராபாத்திற்கு பலம் கொடுக்கும்.

மும்பை அணி, மெக்க்ளேனஹானுக்கு பதிலாக சக நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தியை மீண்டும் களமிறக்கும் என எதிர்பார்க்கலாம். எனெனில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிவிட்டார் மெக்க்ளேனஹான்.

Story first published: Tuesday, April 11, 2017, 12:38 [IST]
Other articles published on Apr 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+