For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா? நெகிழ்ச்சி தருணம்

Recommended Video

அறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா?- வீடியோ

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்திய அணியில் தன் அறிமுக போட்டியில் ஆடிய ப்ரித்வி ஷா சதம் அடித்து பல சாதனைகள் செய்தார்.

போட்டிக்கு பின் பேசிய ப்ரித்வி ஷா, தன் சதத்தை தனக்காக பல தியாகங்கள் செய்த தன் தந்தைக்கு சமர்ப்பித்தார்.

99 பந்துகளில் சதம்

99 பந்துகளில் சதம்

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய ப்ரித்வி ஷா, எந்த பயமும், தயக்கமும் இன்றி ஆடினார். அவரது உடல் மொழி தான் அவரது பலம் என்பது தெளிவாக தெரிந்தது. தன் முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக பவுண்டரிகள் குவித்த அவர், 99 பந்துகளில் சதம் கடந்தார். 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

[ பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு ஓபனிங்கா? என்னப்பா இது? ]

தந்தைக்கு சமர்ப்பணம்

தந்தைக்கு சமர்ப்பணம்

போட்டிக்கு பின் பேசிய அவர், "நான் என் தந்தையை பற்றி தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்காக அவர் நிறைய தியாகங்கள் செய்து இருக்கிறார். நான் எப்போது சதம் அடித்தாலும் அவரை நினைப்பேன். இப்போது என் முதல் டெஸ்ட் சதம் முழுவதும் அவருக்கே" என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தியாகம் செய்த தந்தை

தியாகம் செய்த தந்தை

இதில் சோகம் என்னவென்றால், ப்ரித்வி ஷா தன் நான்கு வயதில் தாயை இழந்து விட்டார். தனியாளாக இவரை வளர்த்த இவரது தந்தை, ப்ரித்வி ஷா கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற பள்ளிக்கு அவரை மாற்றியுள்ளார். அந்த பள்ளி வீட்டில் இருந்து நீண்ட தூரம் என்பதால், அவரை கொண்டு விடுவதற்காக தன் வியாபாரத்தை விட்டு இருக்கிறார்.

தக்க மரியாதை

தக்க மரியாதை

இவ்வளவு தியாகம் செய்த அவரது தந்தைக்கு தக்க மரியாதை செய்துள்ளார் இந்த பதினெட்டு வயது பாலகன். இன்று ப்ரித்வி ஷா அடித்த சதம் பல சாதனைகளை படைத்துள்ளது. குறைந்த வயதில் சதம் அடித்த இந்தியாவின் இரண்டாவது வீரர், அறிமுக போட்டியில் சதம் அடித்த 15வது இந்தியர் என பல பெருமைகளை பெற்றார் ப்ரித்வி.

[ சச்சின், கங்குலி வழியில் ப்ரித்வி ஷா.. அறிமுக போட்டியில் இருந்தே சாதனைகள் ஆரம்பம் ]

Story first published: Friday, October 5, 2018, 8:34 [IST]
Other articles published on Oct 5, 2018
English summary
Prithvi Shaw dedicated his debut century to his Single father
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+