Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா டெஸ்ட்டில் ஓபனிங் இறங்கணும்! கட்டை போடாம அதிரடியா ஆடணும்!

Recommended Video

ப்ரித்வி ஷா காயம், கேள்விக்குறியாகும் தொடக்க வரிசை

லண்டன் : இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் எந்த இரு வீரர்களை துவக்க வீரர்களாக களம் இறக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான் ப்ரித்வி ஷா பற்றியும், அவருக்கு பதில் யாரை களம் இறக்கலாம் எனவும் யோசனை கூறியுள்ளார்.

ப்ரித்வி காயம்

ப்ரித்வி காயம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஒரே ஒரு நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் ஆடியது. அப்போது ப்ரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார். இளம் வீரரான ப்ரித்வி ஷா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் ஆட கனவுகளோடு இருந்த நிலையில், இந்த காயம் அவரை வெகுவாக பாதித்துள்ளது. எப்படியும் அவரது இடம் வேறு ஒருவருக்கு கிடைக்கும் என சக வீரர் அஸ்வின் தெரிவித்து இருந்தார்.

எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் நடக்குது.. ப்ரித்வி ஷா காயம் பற்றி "சூசகமாக" சொன்ன அஸ்வின்

ரோஹித் சர்மா இறங்கலாம்

ரோஹித் சர்மா இறங்கலாம்

மைக்கேல் வான் இது பற்றி கூறுகையில், "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ப்ரித்வி ஷா இழப்பது பெரிய அவமானம். மிகச் சிறந்த இளம் திறமைசாலி.. நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு பதில் ரோஹித் சர்மாவை டாப் ஆர்டரில் களம் இறக்குவேன். இவர் (ரோஹித்) டெஸ்ட் கிரிக்கெட்டை தெரிந்து கொள்ளாத வரை மிக நல்லது" என கூறியுள்ளார்.

ராகுல் மோசமான செயல்பாடு

ராகுல் மோசமான செயல்பாடு

ப்ரித்வி ஷா இல்லாத நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய், ராகுல் உள்ளனர். இவர்களில் ராகுல் சமீபத்தில் சுத்தமாக ரன் குவிக்கவில்லை. முரளி விஜய் துவக்க வீரராக களம் இறங்குவது கிட்டதட்ட உறுதி என்றாலும், அவருடன் யாரை களம் இறக்கலாம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ரோஹித் பெயரையே கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் மைகேல் வானும் இணைந்துள்ளார்.

ப்ரித்வி ஷா காயம்.. ரோஹித் சர்மா, முரளி விஜய், ராகுல்.. ஆஸி. டெஸ்ட்டில் யாரை ஓபனிங் இறக்கலாம்?

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் இடம்

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் இடம்

ரோஹித் சர்மா அதிரடி வீரர் என்பதால் அவர் அதே மாதிரி டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என கூறியுள்ளார் வான். ரோஹித் துவக்கத்தில் பொறுமையாக ஆடி விட்டு பின்னர் அதிரடியாக ஆடுவார். அதே போல ஆடுவதே சிறந்தது என கூறியுள்ளார் வான். ரோஹித் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து வந்தாலும் டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் ரோஹித். தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா துவக்க வீரராக இறங்கி ரன் குவித்தால் நிரந்தர டெஸ்ட் வீரராக மாறி விடுவார்.

Story first published: Saturday, December 1, 2018, 12:13 [IST]
Other articles published on Dec 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+