Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ இதுதான் இனிமேல் பஞ்சாப் டீம் லோகோவா.. சிஎஸ்கேவை காப்பி அடித்த பிரீத்தி ஜிந்தா.. ரொம்ப மோசம்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு பஞ்சாப் அணி தங்கள் லோகோ மற்றும் பெயரை மாற்றி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடக்க உள்ளது. சென்னையில் மினி ஏலமாக இது நடக்க உள்ளது.

இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்துள்ளனர். பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா இதற்காக சென்னை வந்துள்ளார்.

ஐபிஎல்

ஐபிஎல்

2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு பஞ்சாப் அணி தங்கள் லோகோ மற்றும் பெயரை மாற்றி உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பஞ்சாப் அணியில் இருந்து முக்கியமான் வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி மோசமான நிலையில் உள்ளது. பஞ்சாப் அணியில் 9 வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை

சென்னை

பஞ்சாப் அணியே இதனால் காலியாக உள்ளது. கிட்டத்தட்ட 59 கோடி ரூபாய் அந்த அணியிடம் மீதம் உள்ளது. இந்த நிலையில் ராசி பார்த்து அந்த அணி பெயர் மற்றும் லோகோவை மாற்றி உள்ளது. கடந்த தொடரில் இந்த அணி அதிர்ஷ்டம் இன்று வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் கூட தோல்வி அடைந்தது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இதனால் பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று அந்த அணி முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணிக்கு தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயருக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிங்கம் கர்ஜனை செய்வது போல லோகோவை மாற்றி உள்ளது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

பார்ப்பதற்கு சிஎஸ்கே அணியின் லோகோவை போலவே இந்த லோகோவும் இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது. பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் வீரர்களை பஞ்சாப் அணியும் குறி வைக்கும். சிஎஸ்கேவை பார்த்து ப்ரீத்தி ஜிந்தா நிறைய தவறான முடிவுகளை எடுப்பார்.

லோகோ

லோகோ

தற்போது சிஎஸ்கே போல லோகோ இருக்க வேண்டும் என்று அதேபோல் லோகோவை உருவாக்கி உள்ளார். அதோடு சென்னை சூப்பர் கிங்சில் சூப்பரை நீக்கிவிட்டு பஞ்சாப்பை சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இணையத்தில் இதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, February 17, 2021, 16:57 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+