Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை நம்புனதுக்கு.. மொத்த பஞ்சாப் டீமையும் காலி செய்த 2 பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகம்.. பரிதாபம்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பஞ்சாப் அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி மோசமான நிலையில் உள்ளது.

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடக்கிறது. சென்னையில் மினி ஏலமாக இது நடக்க உள்ளது.

இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் ஒவ்வொரு அணியும் முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்கும் என்கிறார்கள்.

பஞ்சாப்

பஞ்சாப்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பஞ்சாப் அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி மோசமான நிலையில் உள்ளது. பஞ்சாப் அணியில் 9 வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

பஞ்சாப் அணி முக்கியமான வீரர்களை ரிலீஸ் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. அணியில் பல வருடங்களாக இருந்த மேக்ஸ்வெல் விடுவிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் முக்கியமான வீரர்களின் ஜிம்மி நீசம், கருண் நாயர், கார்ட்ஸ், ஜெகதீச சுசித், கிருஷ்ணப்ப கவுதம், தஜிந்தர் சிங், ஷெல்டன் காட்ரல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

முக்கியம்

முக்கியம்

பஞ்சாப் அணியில் இருந்து முஜீப் உர் ரஹ்மான் நீக்கப்பட்டதுதான். இவர் சர்வதேச அளவில் மிக சிறந்து விளங்கும் டி 20 ஆல் ரவுண்டர். இவரும் நீக்கப்பட்டுள்ளார். மொத்தம் 9 வீரர்கள் இப்படி நீக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப்

பஞ்சாப்

கிட்டத்தட்ட பஞ்சாப் அணியே இதனால் காலியாகி உள்ளது. மொத்தமாக புதிய அணியை எடுக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. முழுக்க முழுக்க கே . எல் ராகுல் மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே எடுத்த முடிவுதான் இது என்கிறார்கள். இவர்கள்தான் இப்படி வீரர்களை வெளியேற்றியது என்று கூறப்படுகிறது.

முடிவு

முடிவு

முக்கிய வீரர்கள் பலரை பஞ்சாப் அணி நீக்கியது அந்த அணி நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். பலரை இப்படி வெளியேற்றிவிட்டோம், ஏலத்தில் நல்ல வீரர்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று பஞ்சாப் அணி நிர்வாகம் அச்சப்படுகிறது.

மாற்றம்

மாற்றம்

ஆனால் புதிய அணியை மொத்தமாக இறக்க வேண்டும் என்று ராகுல் நினைக்கிறார். இதனால்தான் அவர் வீரர்களை மாற்றி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது பஞ்சாப் அணி 9 வீரர்களை நாளை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

வெளிநாடு

வெளிநாடு

இதில் 5 வெளிநாட்டு வீரர்களை எடுக்க வேண்டும். அந்த அணியிடம் 53.20 கோடி ரூபாய் உள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள ஏலத்தில் அதிக வீரர்களை எடுக்க வேண்டும். இதனால் நாளை பஞ்சாப் அணியின் ஏலம் அதிக அளவு கவனம் பெறும்.

Story first published: Thursday, February 18, 2021, 8:34 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+