Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லி அடித்த கில்லி... டாஸ் வின் முதல் மேட்ச் வின் வரை.... அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் அடுத்தடுத்து மயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயிலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை சாத்தியப்படுத்தினார்.

17வது போட்டி

17வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பௌலிங்கை சமாளிக்க முடியாமல் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி திணறியது.

ரோகித் குற்றச்சாட்டு

ரோகித் குற்றச்சாட்டு

சென்னையின் பிட்ச் தங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்று தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து வருகிறார். இதுவரை இந்த தொடரில் சென்னையில் 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

63 ரன்களை குவித்த ரோகித்

63 ரன்களை குவித்த ரோகித்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கையே தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை அளித்தனர். ரோகித் சர்மா 63 ரன்களை குவித்திருந்தார்.

அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப்

அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப்

இதையடுத்து ஆடத் துவங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அணியை துவக்கத்தில் இருந்து சிறப்பாக வழிநடத்தினார். அடுத்தடுத்து மயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயிலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை அமைத்து அதிரடியாக அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார்.

5வது இடத்திற்கு முன்னேற்றம்

5வது இடத்திற்கு முன்னேற்றம்

இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் அடுத்தடுத்து 3 தோல்விகளுடன் திணறிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது சிறப்பான கம்பேக். நடப்பு சாம்பியனை பஞ்சாப் அணி வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Story first published: Saturday, April 24, 2021, 1:28 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+