200வது போட்டி... முதல்ல டாஸ் வெற்றி... அடுத்ததா கேம் வெற்றி... எக்கச்சக்க திட்டத்தில் பஞ்சாப் அணி!
சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 17வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 200வது டி20 போட்டியாகும். இதனிடையே சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் இறுதிப்போட்டி இது.

17வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 17வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் முறையே 2 மற்றும் ஒரு முறை வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4 மற்றும் 7வது இடங்களில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் தீவிரம்
இந்த தொடரில் வெற்றி பெற்று ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் இந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி அணுகவுள்ளது. இதனிடையே தன்னுடைய மிடில் ஆர்டரை சிறப்பாக சரி செய்து இன்றைய போட்டியில் வெற்றியை பெற வேண்டிய கட்டாயம் பஞ்சாப் அணிக்கு உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தீவிரம்
இந்த போட்டியின்மூலம் தனது 200வது டி20 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இதுவரை இரு அணிகளும் 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பீல்டிங் தேர்வு
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை துவங்கியுள்ளது. அணியின் குவின்டன் டீ காக் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

சென்னையில் 5வது போட்டி
இன்றைய போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் இறுதி போட்டியாகும். இதுவரை சென்னையில் ஆடிய 4 போட்டிகளில் 2ல் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதி தோல்வியடைந்த நிலையில் இன்றைய 5வது போட்டியில் அந்த அணி வெற்றிக்கு மிகுந்த தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications