Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேரம் சரியில்லை.. பேரை மாத்த வேண்டியதுதான்.. மொத்தமாக புதிய பெயர் வைக்கும் ஐபிஎல் அணி.. கடவுளே!

பஞ்சாப்: 2021 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் முக்கியமான அணி ஒன்று தங்கள் அணியின் பெயர், லோகோ, ஜெர்சி நிறத்தை மாற்ற உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் புதிய பொலிவுடன் களமிறங்கும்.

அதேபோல் ஒவ்வொரு அணியும் புது புது திட்டங்களை இந்த தொடருக்காக வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சீசனில் நன்றாக ஆடாத அணிகள் இந்த சீசனுக்காக பெரிய அளவில் தயார் ஆகும்.

தயார்

தயார்

கடந்த சீசனில் மோசமாக ஆடிய அணிகள் என்றால் அது பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகள்தான். முதல் போட்டியில் இருந்தே பஞ்சாப் தொடர்ந்து தோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டிய வாய்ப்புள்ள போட்டிகளில் கூட தோல்வி அடைந்தது. சூப்பர் ஓவர் தோல்வி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி என்று பஞ்சாப் அணி அதிர்ச்சி அளித்தது.

 பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும். அணியை கே. எல் ராகுல் நன்றாக வழி நடத்தினார். ஆனாலும் பெரிய அளவில் தொடக்கத்தில் வெற்றிபெற முடியவில்லை. கடைசியில்தான் அந்த அணி வென்றது.

 நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களை நீக்கிவிட்டு புது பொலிவுடன் களமிறங்க பஞ்சாப் முடிவு செய்துள்ளது . அதன்படி அணி ஒன்று தங்கள் அணியின் பெயர், லோகோ, ஜெர்சி நிறத்தை மாற்ற உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருக்கும் பெயரை மாற்ற அந்த அணி முடிவு செய்துள்ளார் .

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் ஷேர் (சிங்கம்) அல்லது இதேபோன்ற பொருள் கொண்ட பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா எடுத்த முடிவு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. அணியின் ஆடை நிறமும் பச்சை அல்லது பிங்க் நிறத்திற்கு மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, February 10, 2021, 15:46 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+