Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை: டக் அவுட்டான சுப்மன் கில்.. 7 ரன்களில் ஆட்டமிழந்த ஜடேஜா

ராஜ்கோட்: ரஞ்சி டிராபி 2025-26 எலைட் குரூப் பி பிரிவின் போட்டியில், பஞ்சாப் அணி சௌராஷ்டிராவை எதிர்கொண்டது. இதில், இந்திய டெஸ்ட் கேப்டனும், பஞ்சாப் அணியின் கேப்டனுமான ஷுப்மன் கில், இந்த ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 26 வயதான கில், முதல் இன்னிங்ஸின் ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். பஞ்சாப்பின் 20வது ஓவரின் கடைசிப் பந்தில், சௌராஷ்டிராவின் பார்த்த் பூத் பந்துவீச்சில், இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து LBW முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

2025 ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிமுகமான கில்லுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.. இந்தப் போட்டியில் பஞ்சாப்பின் நான்காவது விக்கெட்டாக வீழ்ந்தபோது, அணி 73/4 என்ற நிலையில் தடுமாறியது. 2025ல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த கில், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு அணியின் நாக் அவுட் வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புவார்.

இந்தப் போட்டியில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். 37 வயதான அவர், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான அணியின் முதல் இன்னிங்ஸின் ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி, ஆறு பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜஸ் இந்தர் பந்தில் ஹர்பிரீத் பிராரால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் சிறப்பாக பந்துவீசி 18.1 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவரின் செயல்பாடு அணிக்கு பலம் சேர்த்தது. மேலும், சௌராஷ்டிராவின் இரண்டு பேட்ஸ்மேன்களை ஜஸ் இந்தர் பெவிலியனுக்கு அனுப்பினார். முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 172 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 139 ரன்களில் சுருண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

பஞ்சாப் அணியின் ஆடும் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (WK), ஷுப்மன் கில் (C), ஹர்னூர் சிங், உதய் சஹாரன், அன்மோல்பிரீத் சிங், நேஹல் வதேரா, சன்வீர் சிங், ஹர்பிரீத் பிரார், க்ரிஷ் பகத், பிரரித் தத்தா, ஜஸ்ஸிந்தர் சிங்.

சௌராஷ்டிரா அணியின் ஆடும் லெவன்: ஹர்வீக் தேசாய் (WK), சிராஜ் ஜானி, ஜெய் கோஹில், அர்பித் வாசவதா, பிரீரக் மங்காட், ரவீந்திர ஜடேஜா, சம்மர் கஜ்ஜார், ஹெட்விக் கோடக், பார்த்த் பூத், தர்மேந்திரசிங் ஜடேஜா, ஜெய்தேவ் உனத்கட் (C).

Story first published: Friday, January 23, 2026, 7:20 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+