Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செத்துப்போன பிட்ச்சால் போரடிக்க போகுது.. மேற்கிந்திய தீவுகள் டூர் பற்றி அஸ்வின் ஆதங்கம்

ஆன்டிகுவா: மேற்கு இந்திய தீவுகள் தொடர் தனக்கு 'போர்' அடிக்கப்போகிறது என்று கூறியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட்டுகளில் ஆட உள்ளது இந்தியா. இன்றுடன் வாரிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்கள் முடிய உள்ளன.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மே.இ.தீவுகள் அணி 2 தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியை எதிர்கொள்ளும் முன்னேற்பாடு பயிற்சிகளைத்தான், இந்திய அணி மேற்கொள்ளப்போகிறது.

ஸ்லோ பிட்ச்

ஸ்லோ பிட்ச்

இந்நிலையில், பிசிசிஐ வெப்சைட்டுக்கு அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் மே.இ.தீவுகள் பிட்ச் மிகவும் ஸ்லோவாக செயல்படுவதாக குறை கூறியுள்ளார்.

போரடிக்கும்

போரடிக்கும்

இதுபோன்ற ஸ்லோ பிட்சுகளில் விக்கெட்டை வீழ்த்த காத்திருக்க வேண்டிவரும். எனவே தொடர்ச்சியாக பல ஓவர்களை வீசிக்கொண்டேயிருக்க வேண்டிய நிலை எனக்கு வரலாம். இது போரடிக்கவே செய்யும். ஆனால் ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் பிறகு வரிசையாக கழற்றிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரெடியாகுறோம்

ரெடியாகுறோம்

மேற்கிந்திய தீவில் வெப்பம் அதிகமாக இருப்பதால் இந்த சீதோஷண நிலைக்கு உடல் தயாராக சில நாட்கள் பிடிக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

நம்பிக்கை, அதானே எல்லாம்

நம்பிக்கை, அதானே எல்லாம்

மேலும், மேற்கிந்திய தீவுகள் அணி தேர்வு குறித்து கேட்டபோது, நல்ல அணிதான் என்று தெரிவித்துள்ளார் அஸ்வின். இருப்பினும், இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 20 விக்கெட்டுகளையும் இந்தியா வீழ்த்தும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாதிப்போம்ங்க

சாதிப்போம்ங்க

முன்னணி பந்து வீச்சாளராக இருப்பதில் சவால்களும் உள்ளன, சாதகங்களும் உள்ளன. என்மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என்பதால், நெருக்கடியும் அதிகம். ஆனால் இந்த நெருக்கடிகளை மீறி சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, July 14, 2016, 17:23 [IST]
Other articles published on Jul 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+