Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலம் கடந்துவிட்டது.. இப்படி மோசமாக ஆடினால் என்ன செய்வது.. சிஎஸ்கே எடுத்த தவறான முடிவு.. ஷாக்கிங்!

சென்னை: சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரெய்னா சையது முஷ்டாக் கோப்பை தொடரில் பெரிய அளவில் ஆடாமல் சொதப்பி இருக்கிறார்.

தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பையின் செமி பைனல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக அணி இன்று செமி பைனல் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் உத்தர பிரதேச அணியில் ரெய்னா ஆடி வந்தார். ஆனால் உத்தர பிரதேச அணி நாக் அவுட் சுற்றுக்கு தேர்வாகவில்லை.

எப்படி

எப்படி

உத்தர பிரதேச அணியில் ஆடிய ரெய்னா பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவர் அரைசதம் அடித்தார். அதன்பின் வேறு எந்த போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை.

 சொதப்பல்

சொதப்பல்

அதிலும் சில போட்டிகளில் ரெய்னா சிங்கிள் டிஜிட் ரன்களை அடித்து அதிர்ச்சி அளித்தார். எப்போதும் ஷாட் பால் போட்டால் எளிதாக அவுட்டாகிவிடும் ரெய்னா, இந்த முறையும் சையது முஷ்டாக் கோப்பையில் ரெய்னா பல முறை ஷாட் பந்துகளில் அவுட்டானார்.

ஆடவில்லை

ஆடவில்லை

கடந்த இரண்டு வருடமாக பெரிய அளவில் ரெய்னா போட்டிகள் எதிலும் ஆடவில்லை. கடந்த ஐபிஎல்லில் இவர் ஆடவில்லை. அதேபோல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்டார். இதுதான் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் ரெய்னாவை தேவையின்றி ரீ டெயின் செய்துவிட்டோமோ என்று சிஎஸ்கே புலம்ப தொடங்கி உள்ளது. தேவையின்றி 11 கோடி ரூபாய் கொடுத்து இவரை ரீ டெயின் செய்துவிட்டோமோ என்று சிஎஸ்கே அணி புலம்ப தொடங்கி உள்ளது. ஆனால் இனிமேல் அவரை ரிலீஸ் செய்ய முடியாது.

காலம் முடிந்துவிட்டது

காலம் முடிந்துவிட்டது

வீரர்களை ரிலீஸ் செய்வதற்கான காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. பிப்ரவரி 11 வரை சிஎஸ்கே நினைத்தால் ரெய்னாவை டிரேட் செய்ய முடியும். ஆனால் சிஎஸ்கே பெரும்பாலும் ரெய்னாவை டிரேட் செய்யாது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 11:03 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+