ஐபிஎல்லுக்கு கொஞ்ச நாள்தான் இருக்கு.. ஏலம் வேற வருது.. இப்ப போய் இப்படி முடிவு.. ரெய்னா ஷாக்கிங்!
சென்னை: 2021 ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரெய்னா எடுத்து இருக்கும் முடிவு ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்கிறது. சென்னையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுக்கும் என்று கருதப்படுகிறது. பல இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி குறி வைக்க போகிறது..

சர்ச்சை
2021 ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரெய்னா எடுத்து இருக்கும் முடிவு ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதன்படி விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஆட கூடாது என்று ரெய்னா முடிவு எடுத்துள்ளார் விஜய் ஹசாரே கோப்பையில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் இவர்.

ஆனால் என்ன
ஆனால் திடீரென இந்த தொடரில் இருந்து ரெய்னா வெளியேறி இருக்கிறார் . இதற்கு முறையான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ரெய்னா சரியாக ஆடவில்லை. அவரின் பேட்டிங் நன்றாக இல்லை.

பேட்டிங்
அந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ரெய்னா நன்றாக பேட்டிங் செய்தார். இதனால் இவர் பார்ம் மீது டவுட் இருந்தது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ரெய்னா பார்மிற்கு வருவார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதை சிஎஸ்கே பெரிய அளவில் கவனித்தது.

ரெய்னா
ரெய்னா வந்தால் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று சிஎஸ்கே நினைத்தது. ஆனால் தற்போது திடீரென விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் இருந்து ரெய்னா விலகி உள்ளார். இதனால் அவர் மேலும் பார்மை இழக்க வாய்ப்புள்ளது . கடந்த 2 வருடமாக ரெய்னா கிரிக்கெட் ஆடவில்லை.

2 வருடம்
இதனால் அவர் பெரிய அளவில் கிரிக்கெட்டில் டச் கொண்டு இருக்கவில்லை. இப்படி இருக்கும் போது ஐபிஎல்லுக்கு முன்பு நடக்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடரையும் அவர் புறக்கணித்து உள்ளார். ரெய்னாவின் இந்த முடிவு நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications