Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்த மைதானமும் ஆடிப்போனது.. தமிழக வீரர்களை திணற வைத்த அடிபட்ட புலி.. களத்தில் திக் திக் சம்பவம்!

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அசோக் மேனரியா தமிழக வீரர்களை வைத்து செய்து இருக்கிறார்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. முக்கியமான அணிகளை எல்லாம் வீழ்த்தி தமிழக அணி தற்போது காலிறுதி போட்டி முடிந்து அரையிறுதியில் ஆடி வருகிறது.

காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம் அணியை வீழ்த்தி தமிழக அணி வென்றது. பாபா அபராஜித் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் அதிரடி காரணமாக இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது.

செமி பைனல்

செமி பைனல்

இந்த தொடரின் செமி பைனல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் தொடக்கத்தில் திணறிய ராஜஸ்தான் அணி தற்போது அதிரடியாக ஆடி வருகிறது.

அதிரடி

அதிரடி

தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அசோக் மேனரியா தமிழக வீரர்களை வைத்து செய்து இருக்கிறார். இரண்டாவது விக்கெட் விழுந்த பின் அதிரடியாக ஆட தொடங்கி அசோக் மேனரியா தமிழக வீரர்களின் பந்துகளை பறக்கவிட்டார்.

 பறக்கவிட்டார்

பறக்கவிட்டார்

அதிலும் அஸ்வின் கிறிஸ்ட் போட்ட 6வது ஓவரில் அடுத்தடுத்த ஹாட் ட்ரிக் பவுண்டரி, நான்காவது பந்தில் சிக்ஸ் என்று அசோக் மேனரியா வெளுத்து வாங்கினார். மொத்த மைதானமும் இவரின் பேட்டிங் பார்த்து மிரண்டு போனது. தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் எப்படி பீல்டிங் நிறுத்தினாலும் அசோக் மேனரியா அடித்து வெளுத்தார்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் கிறிஸ்ட் ஓவர் மட்டுமின்றி மற்ற பவுலர்கள் ஓவரிலும் அசோக் மேனரியா அதிரடியாக ஆடினார். வெறும் 32 பந்துகள் மட்டுமே பிடித்த அசோக் 51 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி 2 சிக்ஸ் அடக்கம். இவரின் பேட்டிங் காரணமாக ராஜஸ்தான் அணி 10 ஓவருக்கே 100 ரன்களை கடந்தது .

எத்தனை

எத்தனை

ராஜஸ்தானை சேர்ந்த அசோக் மேனரியா 2010 அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து இந்திய அணி காலிறுதியில் வெளியேறியது. இந்த தொடரில் அசோக் மேனரியா சரியாக ஆடவில்லை.

இந்திய அணி

இந்திய அணி

இதனால் இந்திய அணியிலும் அசோக் மேனரியாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் ராஜஸ்தான் மாநில அணியில் சிறப்பாக ஆடி வந்தார். தற்போது சையது முஷ்டாக் கோப்பையில் கம் பேக் கொடுத்து இருக்கும் அசோக் மேனரியா 30 வயதில் வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்.

Story first published: Friday, January 29, 2021, 15:45 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+