Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ - இந்த குத்து போதுமா? ரஞ்சியில் ஆடி மும்பையை வெல்ல வைத்த ஸ்ரேயாஸ்.. ஜெய்ஷாக்கு எதிராக நடனம்

மும்பை : ரஞ்சி கோப்பையை 42வது முறையாக வென்று மும்பை அணி சாதனை படைத்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மைதானத்தில் நடனமாடி மகிழ்ச்சியை கொண்டாடினார். இந்த செயலுக்கு பின்னால் ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ரஞ்சி போட்டி ஆடவில்லை என்ற காரணத்திற்காக பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸை அதிரடியாக நீக்கியது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஐபிஎல் போட்டியில் கூட பங்கேற்காமல் இருந்த ஸ்ரேயாஸ்க்கு கொடுக்கப்பட்ட பெரிய தண்டனை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Ranji trophy Final 2024 - Shreyas iyer celebrated mumbai 42th title with dance

மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய போது பிரதமர் மோடி இந்திய வீரர்களை சந்தித்தார். அப்போது ஸ்ரேயாஸ், பிரதமரை மதிக்காத வகையில் நின்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு காரணம் காட்டி தான் ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ தண்டித்து விட்டதாக ரசிகர்களும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஸ்ரேயாஸ், விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மீண்டும் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார். கடந்த இரண்டு இன்னிங்ஸ்களாக தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர், இறுதிப் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் 11 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் விளாசினார்.

இதில் 10 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் மற்றும் முசீர் கானின் அபார ஆட்டத்தால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்கள் குவித்தது. இதனை எடுத்து களமிறங்கிய விதர்பா அணி 368 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியது.

இதனால் மும்பை அணி வெற்றியை ஸ்ரேயாஸ் உற்சாகமாக கொண்டாடினார். மேலும் ரஞ்சிப் போட்டியில் விளையாடவில்லை என்பதற்காக தானே ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கினீர்கள் தற்போது மும்பை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக தான் விளங்கியதை அடுத்து பிசிசிஐ நிர்வாகிகளை வெறுப்பேற்றும் விதமாக ஸ்ரேயாஸ் குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Thursday, March 14, 2024, 15:18 [IST]
Other articles published on Mar 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+