Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணியை வெற்றி பெற வைத்தார் சச்சின்!

ரோட்டக்: தமது கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 79 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தார்.

ரோட்டக், பன்சி லால் ஸ்டேடியத்தில் ஹரியானா- மும்பை அணிகள் இடையேயான ரஞ்சி கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. ஹரியானா முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை எடுத்தது.

ஹரியானாவின் ஜோகிந்தர் 5, மோகித், ஹர்ஷல் தலா 2, ஹூடா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஹரியானா அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்தது.

3வது நாள் ஆட்டத்தில் ஹரியானா அணி 2வது இன்னிங்சில் 241 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் ஜாகீர், தபோல்கர் தலா 4, குல்கர்னி 2 விக்கெட்டுகளள வீழ்த்தினர்.

240 எடுத்தால் மும்பை வெற்றி

240 எடுத்தால் மும்பை வெற்றி

இதைத் தொடர்ந்து 240 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. மும்பையின் வாசிம் ஜாபர் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ரகானே 40 ரன் எடுத்து அவுட் ஆனார். இக்கட்டான நிலையில் கவுஸ்துப் பவார் - சச்சின் டெண்டுல்கர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 22 ரன்களை சேர்த்தது. பவார் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

நிலைத்து நின்ற டெண்டுல்கர்

நிலைத்து நின்ற டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கருடன் அபிஷேக் நாயர் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்க மும்பை அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் அபிஷேக் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

அடுத்து வந்த ஆதித்யா தாரே 3 ரன்களிலும் ஹிகென் ஷா 8 ரன்களிலும் எடுத்து ஆட்டமிழக்க மும்பை அணி 190 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய டெண்டுல்கர் அரை சதம் அடித்தார்.

சச்சின் தொடர்ந்து அபாரம்

சச்சின் தொடர்ந்து அபாரம்

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 55 ரன்களுடனும் குல்கர்னி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி பெற வைத்தார் டெண்டுல்கர்

வெற்றி பெற வைத்தார் டெண்டுல்கர்

இந்நிலையில் இன்று வெற்றிக்கு தேவையான 39 ரன்களை மும்பை அணி எட்டி வெற்றியைப் பறித்தது. தமது கடைசி ரஞ்சி போட்டி லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 79 ரன்களைக் குவித்திருந்தார். சச்சினின் இந்த ரன்குவிப்பே மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஹரியானாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

உற்சாக கொண்டாட்டம்

உற்சாக கொண்டாட்டம்

வெற்றி பெற்ற மும்பை அணியின் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோளில் தூக்கி வைத்து மைதானத்தை வலம் வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Story first published: Wednesday, October 30, 2013, 14:12 [IST]
Other articles published on Oct 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+