Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரம் படைத்த ரஷித் கான்.. சர்வதேச டி20 வரலாற்றில் எந்த பவுலரும் தொடாத மைல்கல் சாதனை

துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய வரலாறு படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

ஜிம்பாப்வே பேட்டர் மருமணியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் தனது 200-வது விக்கெட்டைப் பதிவு செய்தார். வெறும் 120 டி20 போட்டிகளில் 13.99 சராசரியுடனும், 6.12 எகானமியுடனும் இந்த அபார சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2025 செப்டம்பரில் டிம் சவுதியின் சாதனையை முறியடித்து அதிக விக்கெட் எடுத்த வீரரான ரஷித் கான், தற்போது 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை தொட்ட முதல் வீரராக மாறியுள்ளார்.

Rashid Khan Becomes First Bowler in Cricket History to Take 200 T20I Wickets

கடந்த 2015-ல் ஜிம்பாப்வேக்கு எதிராகவே டி20 அறிமுகமான ரஷித் கான், அதே அணிக்கு எதிராக இந்த உலக சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷித் கானுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் 171 விக்கெட்டுகளுடனும், ஹாங்காங்கின் எஹ்சான் கான் மற்றும் நியூசிலாந்தின் இஷ் சோதி தலா 165 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. அஸ்மத்துல்லா உமர்சாய் 116 ரன்களும், இஜாஸ் அஹ்மத்ஸாய் 52 ரன்களும் விளாசினர். இவர்கள் இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 அரங்கில் 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த உலக சாதனையை முறியடித்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.. ஹாங்காங் சிக்ஸஸ் எப்போது தொடங்கும்? லைவ் பார்ப்பது எப்படி?

இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை.. ஹாங்காங் சிக்ஸஸ் எப்போது தொடங்கும்? லைவ் பார்ப்பது எப்படி?

222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் தபட்ஸ்வா சிகா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்து போராடினர். ஆனால் ஜிம்பாப்வே அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பட்டாசு இல்லாத தீபாவளி.. விராட் கோலியை வச்சு பிரச்சாரம் பண்ணுங்க.. உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை

Also Read

பட்டாசு இல்லாத தீபாவளி.. விராட் கோலியை வச்சு பிரச்சாரம் பண்ணுங்க.. உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை
Story first published: Friday, October 30, 2026, 7:59 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+