Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியில் பெற்ற பெயரை தக்க வைத்த ரஷித் கான்! 19 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!

ஹைதராபாத்: முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சன்ரைசர்ஸின் ரஷித் கான் தான் விளையாடிய இன்றைய இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் 4 ஓவரில் வெறும் 19 ரன்களே கொடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Rashid khan bowling was wonderful today

இதைத்தொடர்ந்து குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சன் ரைசர்ஸ் அணியின் ஸிபின்னரான ரஷித் கான் 4 ஓவர்கள் வீசினார்.

இதில் 3 வீக்கெட்டுகளை வீழ்த்திய அவர், வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குஜராத் லயன்ஸின் குல்கர்னியையும் ரன் அவுட்டாக்கினார். அறிமுகமான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மன்தீப்பை போல்டாக்கினார்.

இதைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டையும் வீழ்த்திய அவர் 4 ஓவரில் 36 ரன்களை கொடுத்திருந்தார். இந்நிலையில் தான் களம் கண்ட இன்றைய இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களுக்கு 3 வீக்கெட்டுகளை வீழ்த்து 19 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் ரேட்டையும் கட்டுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 9, 2017, 19:02 [IST]
Other articles published on Apr 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+