Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் அறிவுரை..கியூவில் நிற்கும் இளம் பட்டாளங்கள்.. தோனியின் ஜெர்சியை கேட்டு பெற்ற நம்பர் 1 வீரர்

துபாய்: நடப்பு ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்க, முதல் அணியாக கெத்தாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விட்டது சி.எஸ்.கே. உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரான சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி துவண்டு கிடந்த சென்னை அணியை கரை சேர்த்து விட்டார்.

நேற்று நடந்த போட்டியில் பரிதாபமான ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது சென்னை. இந்த போட்டி நடந்து முடிந்த பிறகு பல்வேறு சுவாரஸ்ங்கள் அரங்கேறின.

இந்திய இளம் வீரர்கள்

இந்திய இளம் வீரர்கள்

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பலகோடிகள் கொடுத்து வாங்கிய வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து சொதப்பி கொண்டிருக்க, இந்திய இளம் வீரர்கள் பலர் அசத்தி கொண்டிருக்கின்றனர். இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளம் வீரர்கள், சி.எஸ்.கே.வுடன் தங்கள் அணி மோதும் ஆட்டம் முடிந்தவுடன், சென்னை கேப்டன் தோனியை சந்தித்து ஆலோசனை பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். டி20 உலககோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட உள்ளதால் தோனியிடம் ஆலசோனை கேட்க வரும் இளம் பட்டாளங்களின் எண்ணிக்கை பெருகி விட்டது.

தோனியிடம் ஆலோசனை

தோனியிடம் ஆலோசனை

நேற்று போட்டி முடிந்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் ரூமுக்கு சென்று விட, வழக்கம்போல் தோனி ரசிகர்கள் காலரியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத் அணியின் இளம் வீர்ர்கள் பலர் தோனியிடம் தங்கள் தொப்பியில் ஆட்டோகிராப் வாங்கிச் சென்றனர். சில வீரர்கள் தோனியிடம் ஆலோசனை கேட்டுச் சென்றனர். தோனியும் பொறுமையாக அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

ரஷித்கான்

இதேபோல் ஹைதராபாத் அணியின் பிரதான வீரரும், உலகின் நம்பர் 1 டி20 ஸ்பின்னரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், சென்னை கேப்டன் தோனியை சந்தித்தார். அப்போது ரஷித்கான் தோனியின் ஜெர்சியை அவரிடம் இருந்து கேட்டு பெற்றார். இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு சி.எஸ்.கே பேன்ஸ் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி

இந்த ஐ.பி.எல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் வெங்கடேஷ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஹர்சல் படேல், கே.எஸ்.பரத் உள்ளிட்ட பலர் கோலோச்சி வருகின்றனர். வருண் சக்ரவர்த்தி ஏற்கனவே இந்திய அணியில் இருக்கும் நிலையில், மற்றவர்களுக்கும் இந்திய அணியில் பிரகாரசமான எதிர்காலம் இருக்கிறது. தோனியுடன் இவர்கள் ஆலோசனை பெறும் நிலையில், இவர்கள் திறமை கூடுதலாக மெறுகேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Story first published: Friday, October 1, 2021, 16:53 [IST]
Other articles published on Oct 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+