For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர்.. இது மட்டும் நடக்கலனா நான் ஏமாற்றம் அடைவேன்.. ரவி சாஸ்த்ரி கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் ஒரு சீசன் பறவை போல் சஞ்சு சாம்சன் மாறி வருகிறார். எப்போதெல்லாம் வேதாரண்யத்திற்கு ஒரு சீசனில் மட்டும் பறவைகள் வருமோ, அதே போல் ஜூலை மாதத்தில் மட்டும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெறுகிறார்.

முதல் முறையாக அவர் இந்திய ஒரு நாள் அணியில் 2021 ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிகள் தான் அவர் அறிமுகமானார். அதன் பிறகு அடுத்த ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.

Ravi shastri says he will be disappointed if sanju samson utilize this opportunity

அந்த தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடி ஒரு அரை சதமும் அடித்தார்.அதன் பிறகு சஞ்சு சாம்சன் ஒட்டுமொத்தமாக 11 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 66 ஆகும். தற்போது மீண்டும் அவருக்கு வெஸ்ட் இண்டிஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ரவி சாஸ்திரி சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர்.

அவருடைய முழு திறமையையும் சஞ்சு சம்சன் இன்னும் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்பது போல் எனக்கு தெரியும். சஞ்சு சான்சன் கேரியர் முடியும்போது அவர் எந்த சாதனைகளையும் செய்யாமல் முடித்துக் கொண்டால் நான் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் ஒரு பயிற்சியாளராக இருக்கும் போது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட மாட்டார். அது எனக்கு பார்க்கும்போது மனவேதனையாக இருக்கும்.

ஆனால் அதன் பிறகு தொடக்கம் வீரராக ரோஹித் சர்மா களம் இறங்கினார். நான் ரோகித் சர்மாவை எப்படி மிஸ் செய்தேனோ, அதேபோல் தான் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரிஷப் பண்ட்க்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில் கே எல் ராகுலும் தற்போது இந்திய அணிக்கு திரும்புவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலககோப்பைக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Saturday, June 24, 2023, 18:12 [IST]
Other articles published on Jun 24, 2023
English summary
Ravi shastri says he will be disappointed if sanju samson utilize this opportunity சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர்.. இது மட்டும் நடக்கலனா நான் ஏமாற்றம் அடைவேன்.. ரவி சாஸ்த்ரி கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+