Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே சர்ச்சைக்கு ஜடேஜா பதில்.. இங்கிலாந்தில் ஒலித்த ஐபிஎல் பிரச்சினை.. முழு விவரம்!

பெர்மிங்கம்: சிஎஸ்கே கேப்டன்சி சர்ச்சை குறித்து இங்கிலாந்து தொடரில் ஜடேஜா பேசியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இந்திய அணியின் இந்த சிறப்பான ஸ்கோருக்கு காரணமாக இருந்தவர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி தான். 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்களில் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்களை விளாசினார். மறுமுனையில் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடிய ரவீந்திர ஜடேஜா 194 பந்துகளில் 104 ரன்களை அடித்தார்.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

அதிரடி காட்டிய ரிஷப் பண்ட்-ஐ விட, சரியான பார்ட்னர்ஷிப் கொடுத்த ஜடேஜாவுக்கு தான் அதிக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பாராட்டுகளின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜடேஜாவிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஜடேஜாவின் பதில்

ஜடேஜாவின் பதில்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஜடேஜாவிடம், சிஎஸ்கேவில் கேப்டன்சி சொதப்பல் மற்றும் ஆல்ரவுண்டராக சொதப்பல் என விமர்சனங்கள் எழுந்தது இப்படி ஒரு தரமான கம்பேக் கொடுக்க உத்வேகமாக இருந்ததா? சிஎஸ்கே மீது கோபமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிச்சயம் இல்லை என ஜடேஜா கூறியுள்ளார்.

அதுதான் திருப்தி

அதுதான் திருப்தி

ஐபிஎல்-ல் என்ன நடந்தது என்பது எனது மனதில் இல்லவே இல்லை. இந்திய அணிக்காக விளையாடும் போதெல்லாம், அதில் தான் முழு கவனத்தை செலுத்த வேண்டும். அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடுவதை விட எனக்கு வேறு பெரிய மன திருப்தி கிடையாது என ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Monday, July 4, 2022, 16:40 [IST]
Other articles published on Jul 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+