ஆர்சிபிதான் எப்பவும் முக்கியமா? அங்க இந்திய அணி கஷ்டப்படும் போது.. போகஸை மாற்றிய கோலி.. சர்ச்சை!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இப்படி தோல்வி அடைந்துள்ள நிலையில் கேப்டன் கோலி தனது போகஸை வேறு பக்கம் திருப்பி உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வி அடைந்தது. அதிலும் சென்னை பிட்சில் 22 வருடங்களுக்கு பிறகு தோல்வியை தழுவி இந்திய அணி பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நல்ல அணியை தேர்வு செய்தும், வீரர்கள் பார்மில் இருந்தும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.

தோல்வி
இந்திய அணி இப்படி தோல்வி அடைந்துள்ள நிலையில் கேப்டன் கோலி தனது போகஸை வேறு பக்கம் திருப்பி உள்ளார். 2021 ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. இதனால் ஆர்சிபி அணி சீரமைப்பு பணிகளை செய்து வருகிறது .

ஆர்சிபி
ஆர்சிபி அணியில் இருந்து ஏற்கனவே இதற்காக 4 வெளிநாட்டு வீரர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் இன்று நடந்த ஆர்சிபி மீட்டிங்கில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதில் அந்த அணியின் கேப்டன் கோலியும் கலந்து கொண்டார். அதன்படி ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றம்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக 2014-2019 வரை இருந்தவர் சஞ்சய் பங்கர். இவரை தற்போது கோலி பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளார். இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்ததால் தற்போது ஆர்சிபி அணியில் இவரை கோலி எடுத்துள்ளார்.

போகஸ்
இவரின் இந்த முடிவு நல்ல முடிவுதான். ஆனால் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக திணறும் போது ஐபிஎல் குறித்து கோலி முடிவுகள் எடுப்பது தவறு என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்திய அணி கஷ்டப்படும் நேரத்தில் கேப்டனாக கோலி அதை பற்றி விவாதிக்க வேண்டுமே தவிர ஐபிஎல் குறித்து அல்ல என்று பலர் அறிவுரை வழங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications