Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் தான் போட்டி" 16வது முறையாக டக் அவுட்.. கமெண்ட்ரிக்கே வந்துருங்க டிகே!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களுரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத்தின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. ஆடுகளம் ஸ்லோவாக இருப்பதால், ராஜஸ்தான் அணிக்கு இந்த இலக்கு சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

RCB player Dinesh Karthik Equals the Rohit Sharmas Duck out Record in IPL History

இதனிடையே ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது முக்கிய நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், லெக் ஸ்பின்னரான ஆடம் ஷாம்பா பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 16வது முறையாக தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் வெளியேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். இதன் மூலம் 16 முறை டக் அவுட்டாகி, அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் முதலிடத்தில் உள்ளனர்.

இந்த பட்டியலில் 15 முறை டக் அவுட்டாகி சுனில் நரைன் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் இரண்டாமிடத்தில் உள்ளனர். இதையடுத்து 14 முறை டக் அவுட்டாகி அம்பத்தி ராயுடு மூன்றாவது இடத்திலும், 13 முறை டக் அவுட்டாகி பியூஷ் சாவ்லா, கிளென் மேக்ஸ்வெல், பார்த்திவ் படேல், ரஹானே, மணீஷ் பாண்டே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 14, 2023, 17:55 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+