Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், தோனி, கோலியின் சோலி முடிந்தது... அடுத்த டார்கெட் அவர்தான்.. இளம் வீரரின் குறிக்கோள்!

குஜராத்: சச்சின், தோனி, கோலி என முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ள ஹர்ஷல் பட்டேல் தனது அடுத்த குறிக்கோள் என்னவென்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வந்த ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் நிறுத்தப்பட்டதில் மற்ற அணிகளை விட ஆர்சிபி அணியும், அதன் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால், யாரும் எதிர்பார்காத வகையில் அதிரடி காட்டி வந்தது ஆர்சிபி அணி.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்ற அணிகளை மிரட்டி வந்தது. மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் வழக்கம் போல் அதிரடி காட்டினாலும் இந்தாண்டு பவுலிங் தான் ஆர்சிபியில் அட்டகாசமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஹர்ஷல் பட்டேல்.

ஹர்ஷல் வேகம்

ஹர்ஷல் வேகம்

30 வயதாகும் ஹர்ஷல் பட்டேல் இந்த தொடரில் இதுவரை 17 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக பர்ப்புள் நிற தொப்பியை வைத்துள்ளார். குறிப்பாக டெப்த் ஓவர்களில் அவரின் பந்துவீச்சு ஆர்சிபி அணிக்கு பக்கபலமாய் இருந்தது. முதன் முதலில் டெல்லி அணிக்காக கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் விளையாடினார். இந்தாண்டு தனது ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

இந்நிலையில் அவர் தனது கனவு விக்கெட்கள் குறித்து பேசியுள்ளார். அதில், நான் ஏற்கனெவே எனது கனவு விக்கெட்களை எடுத்துவிட்டேன். சச்சின் டெண்டுல்கரை 2011ம் ஆண்டு வீழ்த்தினேன். அதன் பிறகு தோனியின் விக்கெட்டை 2 முறையும், கோலியின் விக்கெட்டை ஒரு முறையும் வீழ்த்தியுள்ளேன். நான் ஆர்சிபி அணிக்கு எதிராக இனி விளையாட மாட்டேன் நினைக்கிறேன். அப்படி ஒருவேளை விளையாடினால் ஏ.பி.டிவில்லியர்ஸ் எனது அடுத்த டார்கெட். அவரின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை.

கோலிக்கு புகழாரம்

கோலிக்கு புகழாரம்

நான் விக்கெட் எடுத்த பிறகு பெரிய அளவில் கொண்டாட மாட்டேன். ஏனென்றால் எனக்கு பதில் கேப்டன் கோலி அதனை செய்துவிடுவார். அணி வீரர்களின் வெற்றிகளையும், சாதனைகளையும் மிகச்சிறப்பாக கொண்டாடும் ஒரு நபர் விராட் கோலி. அதே போல சொதப்பல்களிலும் அருகில் இருப்பார். நான் மும்பைக்கு எதிராக முதல் பந்தே நோ பாலாக வீசினேன். அதற்கு கோலி என் அருகில் வந்து லென்த்தை சரியாக பார் என்று மட்டும் தான் கூறினார். வேறு எதுவுமே சொல்லவில்லை. இதனால் நம்மை சுற்றி ஆயிரம் பிரச்னைகள், பதற்றம் இருந்தாலும், மறைந்துவிடும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 20, 2021, 21:48 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+