இவரு பௌலிங் பயிற்சியாளர் ஆச்சே.. எப்படி டீம்ல விளையாடுறாரு?.. ஐபிஎல்-ல இதெல்லாம் சகஜமப்பா!!
பெங்களூரு : 2018 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஒரு முன்னணி வீரர், இந்த ஆண்டு பந்துவீச்சாளராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடி வருகிறார்.
அந்த வீரர் லசித் மலிங்கா. மலிங்கா 2018 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனையை அப்போது முதல் இப்போது வரை வைத்திருக்கும் ஒரு வீரர் ஏலத்தில் எடுக்கப்படாதது பரபரப்பாக பேசப்பட்டது.

கைவிட்ட மும்பை
அவர் நீண்ட காலம் மும்பை அணிக்கு தான் ஆடி வந்தார். எனினும் அந்த அணி அவரை ஏலத்தில் கைவிட்டது. பின்னர், அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக வைத்துக் கொண்டது மும்பை அணி.

ஐபிஎல் ஏலம்
இந்த நிலையில், 2019 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. அதில் மலிங்காவின் அடிப்படை விலைக்கே அவரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அவரை பந்துவீச்சாளராக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கி இருக்கிறது.
அந்த ஒரு வீரருக்காக மூளையை கசக்கும் மும்பை - பெங்களூர் அணிகள்.. ஆனா அவர் ஒழுங்கா பௌலிங் போடணுமே!

ஆச்சரியப்படுவார்கள்
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை பல கிரிக்கெட் நியதிகளை ஏற்கனவே உடைத்து எறிந்துள்ளது. அந்த வகையில், ஒரு ஆண்டு பயிற்சியாளராக இருந்த மலிங்கா, தற்போது வீரராக மாறி பந்துவீச உள்ளார். இந்த ஆண்டு ஏலத்தில் மலிங்கா மும்பை அணியால் வாங்கப்பட்டது குறித்து அறியாதவர்கள், திடீரென அவர் இன்று பந்து வீசுவதைப் பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவார்கள்.

இலங்கை கிரிக்கெட்
இது ஒருபுறம் இருக்க, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மலிங்கா ஐபிஎல்-இல் ஆட ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததும் சர்ச்சை ஆனது. தற்போது இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கிறார் மலிங்கா.


Click it and Unblock the Notifications