For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு வீரருக்காக மூளையை கசக்கும் மும்பை - பெங்களூர் அணிகள்.. ஆனா அவர் ஒழுங்கா பௌலிங் போடணுமே!

பெங்களூரு : 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் பும்ரா ஆடவுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா இடது தோள்பட்டையில் காயமடைந்தார். அதனால், பேட்டிங் செய்ய அவர் வரவில்லை.

பதற்றம்

பதற்றம்

அவரது காயம் குறித்து ரசிகர்கள், பிசிசிஐ என அனைவரும் பதறினர். காரணம், அடுத்து நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பும்ரா இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட வேண்டும் என்பது தான்.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

பும்ரா இல்லாத இந்திய அணி உலகக்கோப்பை வெல்வது என்பது நடக்காத காரியம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, ஐபிஎல் தொடரில் அவர் காயம் அடைந்த போது பலரும் பதற்றமடைந்தனர்.

பிசிசிஐ தலையீடு

பிசிசிஐ தலையீடு

பிசிசிஐ, அவரது காயம் குறித்து நேரடியாக விசாரித்து தெரிந்து கொண்டது. இந்த நிலையில், அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக பும்ரா களம் இறங்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

மும்பை பிடிவாதம்

மும்பை பிடிவாதம்

மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா இல்லாமல் களம் இறங்க மாட்டோம் என பிடிவாதமாக இருப்பது தெரிகிறது. அந்த அணி அனுபவ வேகப் பந்துவீச்சாளர் மலிங்கா அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில், பும்ராவை முடிந்தவரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

பெங்களூர் அணி, பும்ராவை எதிர்கொள்ளவென்றே சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. பும்ரா போன்றே பந்துவீசக் கூடிய இளம் பந்துவீச்சாளர் ஒருவரை அழைத்து வந்து பந்து வீசச் செய்து பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்தனர்.

பும்ரா நிலை

பும்ரா நிலை

பும்ராவை வைத்து மூளையைக் கசக்கி திட்டம் போட்டுள்ள இரண்டு அணிகளில், வெற்றி பெறப் போவது யார்? இந்த கேள்வி ஒருபுறம் இருக்க, டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்து இருந்தார். எனவே, இரு அணிகள் என்ன திட்டம் போட்டாலும், பும்ரா தனக்கு தானே திட்டம் போட்டு ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

Story first published: Thursday, March 28, 2019, 20:16 [IST]
Other articles published on Mar 28, 2019
English summary
RCB vs MI IPL 2019 : Bumrah is playing against RCB. He got injured during the first match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X