Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ், ஹர்திக் அதிரடி.. மும்பை வெற்றி! கோலி, வில்லியர்ஸ் போராட்டம் வீண்.. கடைசி பந்தில் சர்ச்சை!

பெங்களூரு : 2019 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை பரபரப்பு நீடித்தது.

கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி போராடித் தோற்றது.

பெங்களூர் பந்துவீச்சு

பெங்களூர் பந்துவீச்சு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் க்வின்டன் டி காக் 23, ரோஹித் சர்மா 48 நல்ல துவக்கம் அளித்தனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங் அதிரடி காட்டினர்.

யுவராஜ் சிங் ஹாட்ரிக்

யுவராஜ் சிங் ஹாட்ரிக்

யுவராஜ் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் இந்த போட்டியில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. சாஹல் ஓவரில் யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து, அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஹாட்ரிக் சிக்ஸ்.. மெய்சிலிர்க்க வைத்த யுவராஜ் சிங்! உடனே வேர்ல்டு கப் டீம்ல எடுங்க.. ரசிகர்கள் அடம்!

ஹர்திக் அதிரடி ஆட்டம்

ஹர்திக் அதிரடி ஆட்டம்

சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஹர்திக் தவிர பின் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். கடைசி ஓவர்களில் ஹர்திக் அதிரடி காட்டினார். 14 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார் அவர்.

உமேஷ் யாதவ் சூப்பர்

உமேஷ் யாதவ் சூப்பர்

மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. உமேஷ் யாதவ் தவிர்த்து, மற்ற பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 9+ ரன்களை வாரி இறைத்தனர். உமேஷ் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சாஹல் 4, சிராஜ் 2, உமேஷ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பெங்களூர் சேஸிங்

பெங்களூர் சேஸிங்

அடுத்து சேஸிங் செய்ய வந்த பெங்களூர் அணிக்கு மொயீன் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்து சுமாரான துவக்கம் அளித்தார். பார்த்திவ் பட்டேல் 31, கோலி 46 ரன்கள் அடித்து அணியின் ரன் விகிதத்தை 8 ரன்களை ஒட்டி வைத்திருந்தனர்.

டி வில்லியர்ஸ் அதிரடி

டி வில்லியர்ஸ் அதிரடி

அடுத்து கோலி சென்ற பின் டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். எனினும், அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், அவர் தனியாக அணியை மீட்டார். 18வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தது பெங்களூர். கடைசி இரு ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், பும்ரா வீசிய 19வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

கடைசி ஓவரில்..

கடைசி ஓவரில்..

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. மலிங்கா வீசினார். முதல் பந்தில் ஷிவம் துபே சிக்ஸ் அடித்தார். எனினும், அடுத்த 5 பந்துகளில் டி வில்லியர்ஸ், துபே இருவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

கடைசி பந்து சர்ச்சை

கடைசி பந்து சர்ச்சை

இந்தப் போட்டியின் கடைசி பந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால். ஆனால், அம்பயர் அது தெரியாமல் போட்டியை முடித்து விட்டார். மலிங்கா காலை கிரீஸுக்கு வெளியே வைப்பது ரீப்ளேவில் தெரிந்தது. அதைப் பார்த்து கோலி கடும் கோபமடைந்தார். "இது கிளப் கிரிக்கெட் அல்ல. ஐபிஎல்" என எகிறினார் அவர். எனினும், மும்பை வெற்றி பெற்றதில் எந்த மாற்றமும் இல்லை.

Story first published: Friday, March 29, 2019, 0:36 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+