ஹாட்ரிக் சிக்ஸ்.. மெய்சிலிர்க்க வைத்த யுவராஜ் சிங்! உடனே வேர்ல்டு கப் டீம்ல எடுங்க.. ரசிகர்கள் அடம்!
பெங்களூரு : 2019 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் அதிரடி காட்டினார்.
ஐபிஎல் தொடரில் கடைசி நிலையில் அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங், எப்படி ஆடுவாரோ? ஓர் போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டால் கூட போதுமே! என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது போட்டியில் கலக்கினார் யுவராஜ் சிங்.

ஆறு சிக்ஸர் அடிப்பாரா?
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் வீசிய 14வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை சிக்ஸர் அடித்தார் யுவராஜ் சிங். அப்படியே ஆறு பந்துகளையும் சிக்ஸர் அடித்து விடமாட்டாரா? என ரசிகர்கள் ஏங்கினர்.

பழைய நினைவுகள்
எனினும், நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் யுவராஜ். 2007 டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்த, யுவ்ரக் சிங், இன்று ஹாட்ரிக் சிக்ஸ் மட்டுமே அடித்து இந்திய ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றார்.
அந்த ஒரு வீரருக்காக மூளையை கசக்கும் மும்பை - பெங்களூர் அணிகள்.. ஆனா அவர் ஒழுங்கா பௌலிங் போடணுமே!

மெய்சிலிர்த்தது உண்மை
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும், யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததை பார்த்த போது மெய்சிலிர்த்தது என்பது உண்மை. 2011 உலகக்கோப்பை வென்று கொடுத்த நாயகன் யுவராஜ் சிங், தற்போதைய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 151 ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம், இரண்டாவது போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி
செம பார்முக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கை ஏன் உலகக்கோப்பை அணியில் எடுக்கக்கூடாது? என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகிறார்கள். இந்திய அணி தற்போது மிடில் ஆர்டரில் தோனி, ஜாதவ் தவிர்த்து சரியான வீரர்கள் இன்றி தவித்து வருகிறது.

விடை
2011 உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கை ஏன் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கக்கூடாது? ஐபிஎல் தொடரின் முடிவில் இதற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications