Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்.. என்ன கேப்டன்சி பண்றீங்க? அவரை ஸ்லிப்-ல நிற்க வைக்கலாமா? இப்ப என்ன ஆச்சுன்னு பாருங்க!

பெங்களூரு : மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன்சியில் செய்த தவறால் முக்கிய விக்கெட்டின் கேட்ச் வாய்ப்பு பறிபோனது.

அதனால், ரசிகர்கள் ரோஹித் சர்மாவை திட்டி வருகின்றனர். ஏன்பா.. கேட்ச் விட்டவரை தானே திட்ட வேண்டும்? என நீங்கள் கேட்கலாம். ஆனால், கேட்ச் விட்டவர் "பெரிய தலக்கட்டு" என்பதால் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை பிளந்து கட்டி திட்டி வருகிறார்கள்.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் அணி மும்பை நிர்ணயித்த 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வந்தது. 7வது ஓவரின் ஐந்தாவது பந்தில், பெங்களூர் அணியின் துவக்க வீரர் பார்த்திவ் பட்டேல் மார்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது 67-2 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூர்.

கேட்சை விட்டார்

கேட்சை விட்டார்

அடுத்த பந்தை சந்தித்த புதிய பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ஸ்லிப்பில் எளிதாக கேட்ச் கொடுத்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த நம் பெரிய தலக்கட்டு யுவராஜ் சிங் கேட்சை விட்டு விட்டார்.

ஸ்லிப் பீல்டர் அல்ல

ஸ்லிப் பீல்டர் அல்ல

யுவராஜ் சிங் ஸ்லிப் பீல்டர் அல்ல. அவர் எப்போதும் உலகக்கோப்பை வட்டத்தின் எல்லைகளில் தான் நிற்பார். அந்த இடத்தில் இருந்து தான் பல சிறந்த கேட்ச்களை பிடித்துள்ளார் யுவராஜ் சிங்.

முன்பு போல இல்லை

முன்பு போல இல்லை

ஆனால், வயதான காரணத்தால் யுவராஜ் சிங்கால் முன்பு போல அதிரடியாக பீல்டிங் செய்ய முடியவில்லை. அதனால், அவரை ஸ்லிப் பீல்டிங் செய்ய வைத்தார் ரோஹித் சர்மா. அந்த நேரத்தில் தான் யுவராஜ் சிங் கேட்சை கோட்டை விட்டார்.

ஸ்லிப் பீல்டிங் கலை

ஸ்லிப் பீல்டிங் கலை

ஸ்லிப் பீல்டிங் செய்ய தனிப் பயிற்சிகள் தேவை. இந்தியாவின் தற்போதைய சிறந்த ஸ்லிப் பீல்டர் ரோஹித் சர்மா தான். அதன் நுணுக்கங்களை அறிந்த ரோஹித், ஏன் யுவராஜ் சிங்கை தேவையில்லாமல் அங்கே நிற்க வைத்தார் என்பதே ரசிகர்களின் கோபமாக உள்ளது. யுவராஜ் சிங் ஸ்லிப் பீல்டர் இல்லை அவரை ஏன் ஸ்லிப்பில் நிற்க வைத்தீர்கள்? என கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

யுவி ஹாட்ரிக் சிக்ஸ்

யுவி ஹாட்ரிக் சிக்ஸ்

யுவராஜ் சிங் இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து கலக்கினார். 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார் யுவராஜ் சிங். ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். ஸ்லிப் கேட்ச் விஷயத்தில் யுவராஜை குறை கூறாமல், ரோஹித் மீது ரசிகர்கள் பாய இதுவும் ஒரு காரணம்.

Story first published: Thursday, March 28, 2019, 23:34 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+