Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி புதிய ஐபிஎல் சாதனை.. என்ன இருந்தாலும் சுரேஷ் ரெய்னாவை தொட முடியலையே!!

பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்து அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி சரியாக 5000 ரன்களை தொட்டு, ஆட்டமிழந்தார்.

5000 ரன்கள்

5000 ரன்கள்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 187 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த பெங்களூர் அணியில் கோலி பொறுப்பாக ஆடினார். 31 பந்துகளில் 46 ரன்கள் அடித்த கோலி ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை தொட்டார்.

எத்தனை இன்னிங்க்ஸ்?

எத்தனை இன்னிங்க்ஸ்?

சரியாக அடுத்த பந்தில் தன் விக்கெட்டை பும்ராவிடம் பறிகொடுத்தார் கோலி. 157 இன்னிங்க்ஸ்களில் கோலி 5000 ஐபிஎல் ரன்களை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் கோலி.

ஹாட்ரிக் சிக்ஸ்.. மெய்சிலிர்க்க வைத்த யுவராஜ் சிங்! உடனே வேர்ல்டு கப் டீம்ல எடுங்க.. ரசிகர்கள் அடம்!

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

முதலில் 5000 ரன்களை கடந்த வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில், இதே பெங்களூர் அணிக்கு எதிராக அந்த மைல்கல்லை கடந்து இருந்தார்.

முதல் இட போட்டி

முதல் இட போட்டி

ரெய்னா தற்போது 5034 ரன்கள் எடுத்துள்ளார். கோலி இந்தப் போட்டியில் ரெய்னாவின் அதிக ஐபிஎல் ரன்கள் என்ற சாதனையை முந்த முடியவில்லை. இந்த தொடர் முடிவதற்குள், கோலி - ரெய்னா இருவரும் ஒருவரை ஒருவர் முந்த அதிக வாய்ப்புள்ளது.

ஏபி டி வில்லியர்ஸ் சாதனை

ஏபி டி வில்லியர்ஸ் சாதனை

இதே போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் 4000 ஐபிஎல் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Story first published: Thursday, March 28, 2019, 23:51 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+