ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக பல முக்கிய இன்னிங்சிஸ்களை விளையாடிய தினேஷ் கார்த்திக், இம்முறை தடுமாறி வருகிறார். நடுப்பு சீசனில் 12 போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் வெறும் 140 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.
இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் ட்க் அவுட்டான நிலையில், ஆர்சிபி அணி அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கி, அனுஜ் ராவத்தை இம்பேக்ட வீரராக மாற்றியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

இதனையடுத்து அனுஜ் ராவத் இன்று விக்கெட் கீப்பிங் செய்தார். அதில், அவர் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கான கதவு மூடப்பட்டதாக தெரிகிறது. அதுவும், அனுஜ் ராவத் செய்த ரன் அவுட், தோனியை கண் மூன் நிறுத்தியது.
இன்றைய ஆட்டத்தில் ஏற்கனவே ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறிய போது, அந்த அணியின் பேட்டிங் வரிசையை மண்ணை போட்டு மூடுவது போல் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஷிம்ரன் ட்மயர் நேராக பந்தை சிராஜிடம் அடித்துவிட்டு ஓடினார்.
அப்போது, எதிர்முனையில் இருந்து அஸ்வின் ஓடி வந்தார். அப்போது சிராஜ் எறிந்த பந்தை தோனி ஸ்டைலில், நேராக ஸ்டம்பிற்கு அனுஜ் ராவத் திருப்பி விட்டார். இதன் மூலம் பந்தையே எதிர்கொள்ளாமல் அஸ்வின் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து அனுஜ் ராவத்தை ஆர்சிபி வீரர்கள் கொண்டாடினர். தற்போது இந்த ரன் அவுட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.