Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs MI: முதலில் பேட்டிங் செய்யும் மும்பை.. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு!

பெங்களூரு: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் மூன்றாம் நாளான இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.

RCB won the toss and opt to bowl against Mumbai in IPL 2023

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பெங்களூரு மைதானம் சிறிய மைதானம் என்பதால், சேஸிங் செய்ய எளிதாக இருக்கும் என்பதால் பந்துவீச்சு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியில் வென்றதே இல்லை. இதனால் இந்த வரலாற்றை மாற்ற மும்பை அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பின் பெங்களூரு அணி களமிறங்குவதால், வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் என்ற முனைப்புட விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சின்னசாமி மைதானத்தில் ரோகித் சர்மாவுக்கு சிறந்த சராசரி இருப்பதால், அவரும் முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியில் ஆல் ரவுண்டர் நேஹல் வதேரா எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அர்ஜூன் டெண்டுல்கர் இம்பேக்ட் பிளேயராக கூட சேர்க்கப்படவில்லை.

பெங்களூரு அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், ஷாபாஸ் அஹ்மத், தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்

இம்பேக் பிளேயர்ஸ்: டேவிட் வில்லி, சோனு, லோம்ரோர், பிரபுதேசாய், அனுஜ் ராவத்

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஆர்ச்சர், அர்ஷத் கான்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: பெஹ்ரண்டார்ஃப், வினோத், ராமன்தீப் சிங், முலானி, சந்தீப் வாரியர்

Story first published: Sunday, April 2, 2023, 19:15 [IST]
Other articles published on Apr 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+