ரியோ: எந்த ஒருவிளையாட்டு வீரரும் தங்கள் தேசத்துக்காக பங்கேற்பது ஜோக்கான விஷயம் அல்ல என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். தற்போது முதல் பாதி தான் முடிந்துள்ளது. அடுத்தபாதியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்றும் சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சானியா, பயஸ் உட்பட பல இந்திய வீரர்கள் அடுத்ததடுத்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர்.

இதுவரை முடிந்துள்ள போட்டிகளில் பதக்கத்து அருகில் சென்றவர் அபினவ் பிந்தரா மட்டுமே. அவரும் சில புள்ளிகளில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் இந்திய வீரர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் வெளியாகிவருகின்றன. செல்ஃபி எடுக்க மட்டுமே இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதற்கு முடிவுகட்டும் விதமாக இந்தியாவின் நல்லெண்ண தூதுவர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், பூமியில் மிகப்பெரிய மற்றும் கடினமான விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக் போட்டிகள் தான். தங்கள் தேசத்துக்காக பங்கேற்கும் போது எந்த வீரரும் ஜோக்காக எடுத்துக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.
பதக்கம் வெல்ல தங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்திய வீரர்களுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. பல ஆண்டுகளாக இதற்காகத்தான் அவர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். தற்போது முதல் பாதி தான் முடிந்துள்ளது. அடுத்தபாதியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.