
பலே கில்லாடி
ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயர் ரிக்கி பாண்டிங்கிற்கு உண்டு. பிற அணி வீரர்களை மனரீதியாக எப்படி பலவீனப்படுத்துவது என்ற வித்தையையும் ரிக்கி நன்கு கற்றுணர்ந்தவர். பவுன்சர் பந்துகளை புல்ஷாட்டாக மாற்றி சிக்சரும், ஃபோரும் பறக்கவிடுவதில் உலகின் தலை சிறந்த வீரர் என்ற புகழ் அவருக்கு உண்டு.

திடீர் ஓட்டம்
ரிக்கி பாண்டிங் ஐபிஎல் 6வது சீசனில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் திடீரென அணியில் இருந்து விலகி சென்றுவிட்டார். தேசிய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த செல்வதாக அப்போது பாண்டிங் காரணம் கூறியிருந்தார்.

தல வருது
இந்நிலையில் மீண்டும் மும்பையுடன் அவரது உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை களமிறங்கும் வீரராக கிடையாது. தலைமை பயிற்சியாளராக அணிக்குள் வருகிறார் பாண்டிங்.

ஜான் ரைட்
தற்போது ஜான் ரைட் மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை கோச்சாக உள்ளார். அவர் புரமோஷன் கொடுக்கப்பட்டு திறமைவாய்ந்த இளைஞர்களை விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கும் பிரிவின் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.

புரமோஷன் குஷியில் கும்ப்ளே
இந்திய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில்கும்ப்ளே, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டுவந்தார். அவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து, கூடைப்பந்து போன்றவற்றிலும் ஆர்வம் காண்பித்து வருகிறது. எனவே அனைத்து விளையாட்டுகளுக்குமான மேற்பார்வையாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

வருக பாண்டியாரே..
இதுகுறித்து அனில்கும்ப்ளே கூறுகையில், "ரிக்கி பாண்டிங் மீண்டும் எங்களோடு இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது அனுபவம் அணிக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications