|
இணைவதற்கு காரணம் இவர் தான்
சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் ராபின் உத்தப்பா மற்றும் அவரது மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த பதிவில், "இவருக்கு நன்றி. இவர் தான் மஹியும் நானும் இணைய காரணம்" என குறிப்பிட்டு இருந்தார்.

அது என்னவா இருக்கும்?
இதை பார்த்த பலரும், "இது என்ன யாருக்கும் தெரியாத ரகசியம். அப்படி ராபின் உத்தப்பா என்ன தான் செய்தார்?" என மண்டையை குடைய ஆரம்பித்து விட்டார்கள். ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் தோனியின் தலைமையில் ஆடியவர். அப்போதிருந்து தோனியும், உத்தப்பாவும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

ரசிகர்கள் யூகம் என்ன?
ஆனால், இதில் சாக்ஷியை எப்படி தோனியோடு சேர்த்து வைத்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. "தோனி : அன்டோல்ட் ஸ்டோரி" திரைப்படத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலையில் இருக்கும் சாக்ஷி தோனியை முதல் முறை சந்திக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த சமயத்தில் தான் உத்தப்பா இவர்களை சேர்த்து வைக்க காரணமாக இருந்திருப்பார் என ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.

ஹர்திக் பண்டியா சர்ச்சை வீடியோ
இதை தவிர்த்து, சாக்ஷி பிறந்தநாள் விருந்தில் ஹர்திக் பண்டியா கலந்து கொண்டார். அந்த விருந்தில் எடுத்த ஒரு வீடியோவில் பண்டியா புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். அதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்

சாக்ஷியின் பிறந்த நாள் படங்கள்
சாக்ஷியின் பிறந்த நாள் விருந்தின் மற்ற புகைப்படங்கள் மற்றும் சாக்ஷி, பண்டியா, ராகுல் வைத்யா பாடிய பிறந்த நாள் பாடல் வீடியோ ஆகியவற்றை காண இங்கே கிளிக் செய்யவும்.