Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

68 வருட காத்திருப்பு.. ரோகித் - கே.எல்.ராகுல் வரலாற்று சாதனை.. அதிர்ச்சியில் இங்கிலாந்து பவுலர்கள்!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

Recommended Video

Lord's மைதானத்தில் சதம் அடித்த KL Rahul.. 30 வருஷத்துக்கு பின் செய்யப்பட்ட சாதனை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கனமழை காரணமாக சமனான நிலையில் 2வது டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப்போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

இதனையடுத்து இந்திய அணி சார்பில் களமிறங்கிய ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்தனர். பந்தில் நல்ல ஸ்விங் இருந்த போதும் ஆட்டத்தின் முதல் பந்து முதலே இருவரும் அசால்டாக பந்தினை எதிர்கொண்டனர். இது பின் வரும் வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது. சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

இந்நிலையில் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். போட்டி நடைபெற்று வரும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் எப்போதுமே தடுமாறி வந்துள்ளன. இந்த மைதானத்தில் கடைசியாக 1952ம் ஆண்டு தான் இந்தியாவின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்ததுள்ளது. அதன் பிறகு நடைபெற்ற பலத்தொடர்களிலும் எந்த வீரர்களும் இதனை செய்யவில்லை.

68 ஆண்டு காத்திருப்பு

68 ஆண்டு காத்திருப்பு

தற்போது ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி 68 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் உள்ளிட்ட நட்சத்திர பவுலர்கள் நெருக்கடி தந்த போது அசாராமல் நின்று ஆடிய ரோகித் சர்மா 28வது ஓவரின் முடிவு வரை 64 ரன்களை எடுத்துள்ளார். மற்றொரு ஓப்பனிங் வீரரான கே.எல்.ராகுல் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Story first published: Thursday, August 12, 2021, 19:50 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+