For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.4.2 கோடியில் லம்போர்கினி.. மனைவியுடன் ஊர்சுற்றும் ரோகித் சர்மா.. கார் நம்பர் தான் ஹைலைட்டே!

மும்பை: மும்பை நகரில் ரோகித் சர்மா ரூ.4.2 கோடி மதிப்பிலான லம்போர்கினி காரில் மனைவியுடன் ஊர் சுற்றிய வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக ட்ரெண்டாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பின் அமெரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடருக்கான தயார்ப் பணிகளில் ரோகித் சர்மா ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஆசியக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கவுள்ளது.

Rohit Sharma and his wife Ritika Sajdeh seen in Lambhorgini Urus Car worth of Rs.4.2 Crores in Mumbai

அதற்கு முன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ரோகித் சர்மா நேரம் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் உள்ள அடிடாஸ் விற்பனை கடைக்கு ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா இருவரும் வந்தனர். ஆடம்பர காரான லம்போர்கினி Urus வகை காரில் வந்து இருவரும் கடைக்குள் சென்றனர். இதனையறிந்த கிரிக்கெட் ரசிகர்களும் கடைக்கு வெளியில் சூழத் தொடங்கினார்கள்.

இதையடுத்து அடிடாஸ் கடையில் இருந்து வெளியில் வந்த ரோகித் சர்மா, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு விடைபெற்றார். இந்த நிலையில் ரோகித் சர்மா வந்த காரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் லார்போர்ஜினி காரினை ரோகித் சர்மா வாங்கிய போது, அதன் விலை ரூ.4.2 கோடியாக இருந்தது. அந்த காரில் மும்பை நகரில் ரோகித் சர்மா வலம் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Sharma and his wife Ritika Sajdeh seen in Lambhorgini Urus Car worth of Rs.4.2 Crores in Mumbai

அதுமட்டுமல்லாமல் காரின் கலர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி நிறமான நீலத்தில் உள்ளது. அதேபோல் காரின் எண், ரோகித் சர்மாவின் அதிகபட்சமாக ஸ்கோரான 264ஐ நினைவுபடுத்தும் வகையில் 0264 என்ற எண் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 10, 2023, 15:17 [IST]
Other articles published on Aug 10, 2023
English summary
India Captain Rohit Sharma seen with Ritika in Mumbai Adidas Showroom for the purchase. Also his Lambhorghini Urus Car is No.0264 which surprised fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+