Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகனை நைஷாக கைகழுவி விட்ட ரோகித்.. அணியில் இடமிருந்தும் சேர்க்கவில்லை.. சோகத்தில் அர்ஜூன்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில போட்டிகளில் அபாரமாக விளையாடி தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும்.

இந்த நிலையில் மும்பை அணியின் கடந்த சில நாட்களுக்கு முன் இடம் பெற்றிருந்த அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது பிளேயிங் லெவனில் இல்லாதது ரசிகர்களை சந்தேகம் அடைய செய்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பெஞ்சில் அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் இம்முறை முதல் முறையாக கடந்த 16ஆம் தேதி விளையாடினார்.

Rohit sharma avoids sachin son arjun tendulkar by not giving chance

முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓவரில் மட்டும் சொதப்பினார். எனினும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். அர்ஜுன் பவர் பிளேவில் நன்றாக பந்து வீசினாலும் அவரை இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் பயன்படுத்த முடியவில்லை.

காரணம் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு வேகம் குறைவாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மும்பை அணியில் காயம் காரணமாக திலக் வருமா இல்லாத நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தி பந்து வீச்சில் மூன்று ஓவரை கொடுத்திருக்கலாம்.ஆனால் ரோகித் சர்மா அப்படியே அர்ஜுன் டெண்டுல்கரை கைகழுவி விட்டார்.
இன்னும் சொல்லப் போனால் கடைசியாக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடியது ஏப்ரல் 25ஆம் தேதி. அதன் பிறகு 18 நாட்கள் ஆகிவிட்டது.

சூரியகுமாரி யாதவ் அதிரடியால் மும்பை அணி வெற்றி பெற தொடங்கி விட்டதால், அர்ஜுன் டெண்டுல்கரை அனைவரும் மறக்க தொடங்கி விட்டனர். தற்போது திலக் வர்மா இல்லாத நிலையில் ஆவது அர்ஜுன் டெண்டுல்கரை பயன்படுத்தாமல் ரோகித் பெஞ்சில் அமர வைத்திருப்பது பல சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கர் 4 போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 13 ரன்களையும் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 12, 2023, 21:12 [IST]
Other articles published on May 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+