Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது கோப்பை வெற்றி... மும்பை இந்தியன்ஸ் ஒரே குடும்பமா இருக்கு... ரோகித் சர்மா பெருமை

துபாய் : மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2020 தொடரில் 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து சக வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ரோகித் சர்மா பேசினார்.

அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே குடும்பமாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Rohit Sharma Calls Mumbai Indians One Family After Their 5th IPL Title Win

ஐபிஎல் 2020 கோப்பையை 5வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தன்னுடைய சக வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ரோகித் சர்மா பேசினார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு குடும்பமாக செயல்பட்டதாக அவர் தன்னுடைய பேச்சின்போது குறிப்பிட்டுள்ளார். இந்த தொடரின்போது தங்களுடன் இருந்த குடும்பத்தினருக்கும் அவர்களது தியாகத்திற்கும் ரோகித் சர்மா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே குடும்பமாக செயல்பட்டதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 12, 2020, 14:02 [IST]
Other articles published on Nov 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+