Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னோட வெற்றிக்கு காரணம் ரிக்கி பாண்டிங்தான்... காலரை தூக்கும் ரோகித் சர்மா

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, இதுவரை ஐபிஎல் சீசனில் 4 கோப்பைகளை வென்றுள்ளார்

அவரது கேப்டன்ஷிப் முறை மிகவும் பொறுமையாக அணி வீரர்களை கையாள்வது. இதன்மூலம் அணி வீரர்களை அவர்களது திறமைகளை சரியாக அணிக்காக பயன்படுத்திக் கொள்கிறார் ரோகித் சர்மா.

இந்நிலையில், தான் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் மற்றும் கோச் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன்ஷிப் பண்புகளை கற்றதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஸ்டப் கொடுக்கும் அணி

ஸ்டப் கொடுக்கும் அணி

ஐபிஎல்லில் மிகவும் வலிமையான அணிகளில் ஒன்றாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை ஐபிஎல்லில் 4 முறை கோப்பைகளை இந்த அணி வென்றுள்ளது. மற்ற அணிகளுக்கு மிகவும் வலிமையான ஸ்டப் கொடுத்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ரிக்கி பாண்டிங்கிடம் கற்றேன்

ரிக்கி பாண்டிங்கிடம் கற்றேன்

இந்நிலையில் தான் கேப்டன்ஷிப் திறமைகளை முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் மற்றும் கோச் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கற்றதாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா டுடேவின் இன்ஸ்பிரேஷன் சீசன் 2வின் முதல் எபிசோடிற்காக பேசிய அவர், அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை அணிக்காக அளிக்க வேண்டும் என்றும் தன்னுடைய பங்கும் மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் குறித்து ஆலோசனை

முக்கியத்துவம் குறித்து ஆலோசனை

அணியின் 10 வீரர்களுடனும் தான் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு, அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைப்பதாகவும் இந்த பண்பை ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து தான் கற்றதாகவும் ரோகித் குறிப்பிட்டார். வீரர்களிடம் தான் எதிர்பார்ப்பதை பெற முடியாது என்றும் அவர்களிடம் உள்ள சிறப்பான திறமைகளை நாம் பயன்படுத்திக கொள்ள வேண்டும் என்றும் பாண்டிங் அடிக்கடி கூறுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிஎஸ்கேவிடம் தோல்வி

சிஎஸ்கேவிடம் தோல்வி

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்களை குவித்து ரோகித் அதகளம் செய்திருந்தார். இந்த போட்டியின்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸ்களை அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.

Story first published: Sunday, September 27, 2020, 17:19 [IST]
Other articles published on Sep 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+