சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு தோல்வியை தழுவி இருக்கிறது .இது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 139 ரன்கள் தான் எடுத்தார்கள். இதில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்காமல் மூன்றாவது வீரராக விளையாடினார்.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் முடிந்து பேசுகையில் அவரிடம் என்ன தவறு நடந்தது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த அவர் அனைத்துமே இன்று தவறாக தான் நடந்தது. இன்று எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. போதுமான ஸ்கோரை பந்துவீச்சாளர்களுக்கு தற்காத்துக் கொள்ள வழங்கவில்லை. இன்று ஒட்டுமொத்தமாக அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பிவிட்டோம்.
இன்று நான் மூன்றாவது வீரராக களம் இறங்கியதற்கு காரணம் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா விளையாடவில்லை. இதனால் நடு வரிசையில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஒரு இந்திய பேட்ஸ்மேன் வேண்டும் என்று நினைத்தேன். இதற்காகத்தான் நான் மூன்றாவது வீரராக விளையாடினேன். ஆனால் நான் நினைத்தது சரியாக அமையவில்லை.
நானும் விரைவாக ஆட்டமிழ்ந்து விட்டேன். பந்துவீச்சில் பியூஸ் சாவ்லாவை நன்றாகவே பந்து வீசினார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு துணையாக நிற்கவில்லை. இது தனி நபர் விளையாட்டு அல்ல. ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது அவசியம். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் நாம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டு உள்ளோம்.
இந்த பாடத்தை இனிவரும் போட்டிகளில் செயல்படுத்த வேண்டும். இந்த ஐபிஎல் சீசனில் எந்த அணிக்குமே சொந்த மண்ணில் சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் பல அணிகளும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். நாங்கள் அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பையில் தான் விளையாட வேண்டும். அதில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.