“இனி அவங்க மேல நம்பிக்கை இல்ல”.. கே.எல்.ராகுல் ஏற்படுத்திய தாக்கம்.. எதிர்கால திட்டத்தை கூறிய ரோகித்
கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சூழலில், இனி இந்தியாவின் திட்டத்தில் இடதுகை பேட்டிங் என்ற குழப்பம் இருக்காது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பேட்டிங்கிற்கு சாதகமான களத்தில் அதிக ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 215 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

2வது ஒருநாள் ஆட்டம்
சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இலங்கையை விட மோசமாக சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (17) மற்றும் சுப்மன் கில் (21) ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின் வந்த கோலி 4 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 28 ரன்களுக்கும் அவுட்டாக இந்தியா 86 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் கே.எல்.ராகுல் (64) - ஹர்திக் பாண்ட்யா ஜோடி (36) இந்தியாவை காப்பாற்றினர்.

ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், இது மிகவும் இருக்கமான போட்டியாக இருந்தது. எனினும் இவை தான் தோல்வி குறித்து கற்றுக்கொடுக்கும். மிகவும் அழுத்தமான சூழலில் ஒரு இன்னிங்ஸை உருவாக்கினோம். அதற்கான ஒரு துருப்புச்சீட்டுதான் கே.எல்.ராகுல்.

ராகுல் செய்த உதவி
5வது இடத்தில் கே.எல். ராகுல் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். அவர் களமிறங்கும் போது டாப் ஆர்டரே இன்னும் சரியாமல் விளையாடி வருவது போல இருந்தது. ராகுல் ஃபார்முக்கு வந்துள்ளதால் நல்ல பேட்டிங் ஆழமும் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு இடதுகை வீரரை அணியின் மிடில் ஆர்டரில் வைத்திருப்பது சிறப்பாக இருக்கும் தான். ஆனால் எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கையே இல்லை.

இடதுகை வீரர் தேவை
எங்களின் அணி கட்டமைப்புக்கு ஒரு இடதுகை வீரர் தேவை தான். ஆனால் எங்களிடம் உள்ள வலதுகை வீரர்களின் தரம் எங்களுக்கு நன்கு தெரியும். எத்தனை கடினமான சூழல்கள் வந்தாலும் வலதுகை வீரர்களே சமாளிப்பார்கள். இனி வரும் போட்டிகளிலும் வலது கை வீரர்கள் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளோம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications